ADDED : ஜூலை 26, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
சின்னமனூர், ஜூலை 27
சின்னமனூரில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் போதையில்லா தமிழகம் கையெழுத்து இயக்கம் நடந்தது.பழநியை சேர்ந்த நிர்வாகி கனகராஜ் தலைமை வகித்து, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். சின்னமனூர் நிர்வாகி சசி ஏற்பாடுகளை செய்திருந்தார். நிர்வாகிகள் பொன் ஆனந்தன், ஈஸ்வரன், கோபிநாத், ராமசாமி, ஆதிகேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடக்கு ரதவீதி, நடுத்தெரு, வ.உ.சி. தெரு, மின்நகர், சிவசக்தி நகர் உள்ளிட்ட வீதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர். பெண்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.
