ADDED : ஆக 01, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
சின்னமனூர், ஆக.
2
காந்தி கிராம நிகர்நிலை பல்கலை., வேளாண் கல்லூரி மாணவர்கள் ரோகன், கோகுல் சதுர்வேதி, குணால், ரோஹித் ராஜ் , கவுரேஷ், பத்நாபஹரி, சுதிர் ரெட்டி ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் ஓடைப்பட்டியில் தங்கி விவசாயிகளுக்கு பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை விளக்கி கூறி வருகின்றனர். ஒடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தினார்கள். மத்திய பல்கலை நுழைவு தேர்வு, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்திற்கும் இந்த தேர்விற்கும் உள்ள தொடர்பு,இட ஒதுக்கீடு முறைகளை பயன்படுத்தி எவ்வாறு சிறந்த வேளாண் கல்லூரிகளில் இடம் பெறுவது பற்றி விளக்கி கூறினார்கள்.
