ADDED : ஜூன் 28, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
கம்பம், ஜூன் 29-–
கம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாரத்தான் போட்டி நடந்தது.
மாரத்தானை கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரம் துவக்கி வைத்தார். கம்பம் வ.உ.சி. திடலில் துவங்கிய மாரத்தான் மெயின்ரோடு, அரசு மருத்துவனை, நாலந்தா பள்ளி, ஆங்கூர் பாளையம் ரோடு வழியாக வ.உ.சி. திடலில் நிறைவடைந்தது. மாரத்தான் ஏற்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகிகள் லெனின் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
