ADDED : பிப் 15, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்,: மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் லோயர்கேம்ப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பலருக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இது பலருக்கு பரவி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். டாக்டர்கள் கூறுகையில், 'அம்மை நோயில் பலவகை உண்டு.
பாதிப்பு ஏற்பட்டவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். வெயிலில் அலையக்கூடாது. தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். எந்த விதமான அம்மை என்பதை கண்டுபிடித்து டாக்டர்களின் ஆலோசனையின்படி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

