டிக்கெட் இயந்திரத்தில் நெட்ஒர்க் பிரச்னை: திணறும் கண்டக்டர்கள்
டிக்கெட் இயந்திரத்தில் நெட்ஒர்க் பிரச்னை: திணறும் கண்டக்டர்கள்
ADDED : ஜூலை 23, 2026 05:22 PM
தேனி, ஜூலை 24–
அரசு பஸ்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது ஏற்படுவதால் கண்டக்டர்கள் அவதி அடைகின்றனர்.
மாவட்டத்தில் தேனி, போடி, கம்பம், குமுளி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட போக்குவரத்து பணிமனைகள் சார்பில் தினமும் 450 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களில் டிக்கெட் வழங்கும்போது சில்லரை பிரச்னை ஏற்படாமல் இருக்க டிஜிட்டல் டிக்கெட் வழங்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சில டிஜிட்டல் இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாக கண்டக்டர்கள் புலம்புகின்றனர். தேனியில் இருந்து சங்கரன்கோயில் சென்ற இரவு நேர அரசு பஸ்சில் பயணிகள் சிலர் அலைபேசி மூலம் ஆன்லைனில் டிக்கெட் எடுக்க பணம் செலுத்த முயன்றனர். ஆனால் டிக்கெட் இயந்திரத்தில் நெட்ஒர்க் பிரச்னை இருப்பதாக கண்டக்டர் தெரிவித்தார். சுமார் 40 நிமிடங்கள் கழித்தும் பிரச்னை தீராததால் சக பயணிகளிடம் கைமாறாக பணம் பெற்று டிக்கெட் எடுத்து சென்றனர். இதில் பயணிகள், கண்டக்டர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதுபற்றி போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கண்டக்டர்களிடம் டிக்கெட் இயந்திரத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்துகிறோம். சிலர் அதை பின்பற்றுவது இல்லை. பழுது ஏற்படும் இயந்திரங்களை புகார் அடிப்படையில் சரிசெய்கிறோம்,’ என்றார்.
