ADDED : ஜூன் 30, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 1–பழைய மோட்டார்களுக்கு பதிலாக புதிய மோட்டர்கள் மாற்றி கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் பொறியியல் துறையினர் தெரிவித்தனர். அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களில் பயன்படுத்தி வரும் பழைய 5எச்.பி., 7 எச்.பி., மோட்டார்களை புதிதாக மாற்றி கொள்ள மானியம் வழங்கப்படுகிறது.
இதற்கு புதிய மோட்டார் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.15 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். மோட்டார்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் மட்டும் வாங்க வேண்டும். மானிய திட்டத்தில் பழைய மோட்டார்களை மாற்றிக்கொள்ள விரும்பும் விவசாயிகள் தேனி, உத்தமபாளையம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றனர்.
