/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாடகை வீடு தேடும் வெளி மாவட்ட பிரமுகர்கள்
/
வாடகை வீடு தேடும் வெளி மாவட்ட பிரமுகர்கள்
ADDED : மார் 28, 2024 06:50 AM
கம்பம்: தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாடகைக்கு வீடு தேடும் படலத்தில் வெளி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க. அ.தி.மு.க. அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்களுக்கிடைய மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் தி.மு.க.. அ.தி.மு.க. மாநிலம் முழுவதும் போட்டியில் இருப்பதால், வெளி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் அதிகம் வர வாய்ப்பில்லை. ஆனால் அ.ம.மு.க. திருச்சி, தேனியில் மட்டும் போட்டியிடுகிறது. தேனியில் கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் போட்டியிடுகிறார்.
தேனி லோக்சபாவில் தி.மு.க.,அ.தி.மு.க. கட்சிகளுக்கு வலுவான கட்டமைப்புடன் உள்ளன. அ.ம.மு.க. விற்கு அந்தளவிற்கு கட்டமைப்பு வசதி இல்லை. பா.ஜ. ஒரளவிற்கு கட்டமைப்பை பலப்படுத்தி உள்ளது . இருந்தாலும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வுடன் ஒப்பிடுகையில் குறைவேயாகும். எனவே, அ.ம.மு.க. வின் பிற மாவட்ட நிர்வாகிகள் கிராமங்களில் தங்கி பிரசாரத்தை வலுப்படுத்த உள்ளனர்.கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி கிராமங்களில் வீடுகள் வாடகைக்கு கேட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஏற்கனவே வீடு பிடித்து பிரசாரத்தை துவக்கி உள்ளனராம்.