/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாலிடெக்னிக் வளாக நேர்காணல் 186 பேர் தேர்வு
/
பாலிடெக்னிக் வளாக நேர்காணல் 186 பேர் தேர்வு
ADDED : பிப் 23, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக்கில் கோவை எல்.எம்.டபுள்யூ., நிறுவனம் சார்பில் வளாகநேர்காணல் நடந்தது. இதில் தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., கோட்டூர், தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் மொத்தம் 292 பேர் பங்கேற்றனர்.
நேர்காணில் 186 பேர் தேர்வாகினர். தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள் சாமி, பொதுச்செயலாளர் மகேஷ், பாலிடெக்னிக் செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் தாமரைக்கண்ணன், பாலிடெக்னிக் முதல்வர் தர்மலிங்கம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டினர். நேர்காணலை பாலிடெக்னிக் வேலைவாய்ப்பு அதிகாரிகள் குமரன், சதீஷ்குமார் செய்திருந்தனர்.