/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 11, 2024 05:30 AM

தேனி: அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், பல மடங்கு அபராத தொகை விதிப்பதற்கான அரசாணையை ரத்து செய்திட வேண்டும்.
ரேஷன் பொருட்களை தரமான எடையில் பொட்டலங்களாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலப் பொருளாளர் பொன்அமைதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மகாலிங்கம், மாவட்ட சிறப்புத் தலைவர்கள் பன்னீர்செல்வம், அழகர்சாமி, மாவட்டச் செயலாளர் அய்யனார், மாவட்ட நிர்வாக அமைப்புச் செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட போராட்டக்குழு செயலாளர் செந்தில்குமார், அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் காமாட்சி முருகேசன், மாவட்ட பொருளாளர் முத்துராயர் ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் பாண்டி நன்றி தெரிவித்தார்.