ADDED : மே 17, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுார் கூனி மந்தையம்மன் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக இருப்பவர் பாண்டியன் 43.
இவர் பணியில் இருந்த போது, கருணாநிதி காலனியைச் சேர்ந்த குபேந்திரன் 43. ரேஷன் அரிசி போடுவதில் தகராறு செய்துள்ளார்.
அங்கிருந்த தராசை எடுத்து உடைத்து பாண்டியனை தாக்கியுள்ளார். இது தொடர்பாக கூடலுார் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. குபேந்திரன் கைது செய்து விசாரிக்கின்றனர்.

