UPDATED : ஜூன் 11, 2026 03:40 PM
ADDED : ஜூன் 11, 2026 03:20 PM
தேனி:மத்திய அரசின் சார்பில் கால்நடை வளர்ப்போர் பயனடையும் வகையில் ‛பாரத் பசுதான்' தரவு தளத்தில் கால்நடைகள், அதனை வளர்ப்போர் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதில் கால்நடைகள் காது வில்லைகள் பொருத்தப்பட விபரம், உரிமையாளர் விபரம், காப்பீடு விபரம், தடுப்பூசிகள் செலுத்திய விபரம், செயற்கை கருவூட்டல், பால் உற்பத்தி உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றப்படும்.
இதன் மூலம் கொள்முதல், விற்பனை செய்யும் கால்நடைகள் பற்றிய முழு விபரங்களும் விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ள இயலும்.தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வரும் கால்நடை பராமரிப்பு பணியாளர்களுக்கு அலைபேசி எண், ஆதார் எண்களை ஒருங்கிணைத்து அலைபேசிகளுக்கு வரும் கடவு சொல், விபரங்களை வழங்கி ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
