ADDED : ஜூன் 21, 2026 07:10 PM
சின்னமனூர், ஜூன் 22
சின்னமனூரிலிருந்து ஓடைப்பட்டி செல்லும் ரோட்டில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பள்ளி நிர்வாகங்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகள், கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் மதுபான கடைகள் உள்ள கடைகள் அகற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், சின்னமனூரில் ஓடைப்பட்டி ரோட்டில் பள்ளிகள், குடியிருப்புகள் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாததால் மாணவர்கள், பெண்கள் அச்சத்துடன் அவ்வழியாக செல்லும் நிலை உள்ளது.மதுப்பிரியர்கள் பலர் இரவில் குடித்து விட்டு அசிங்கமாக பேசிகத்துவதால் அப்பகுதியில் வசிப்போர் முகம்சுளிக்கின்றனர். இந்த கடையை அகற்ற வலியுறுத்தி கலெக்டர், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பள்ளி நிர்வாகங்கள், மின்நகர், கோகுலம் நகர் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.
