ADDED : ஜூன் 06, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு போடி அருகே சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா தி கிரீன் லைப் பவுண்டேஷன் சார்பில் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் அமுதா தலைமை வகித்தார். தி கிரீன் லைப் பவுண்டேசன் செயலாளர் சுந்தரம், உறுப்பினர் சேகர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜாமணி, ஆசிரியர்கள் மனோகரன், விஜயா, ஜெயலட்சுமி, பசுமை பங்காளர் அமைப்பு நிறுவனர் பனை முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.