ADDED : ஜூலை 28, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு போடி அருகே முந்தலில் நல்லோர் வட்டம் அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
நல்லோர் வட்ட பொறுப்பாளர் குறிஞ்சி மணி தலைமை வகித்து அப்துல் கலாம் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன. போடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரயிலுக்கு அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என நல்லோர் வட்டம் சார்பில் வலியுறுத்தப்பட்டன.