ADDED : ஜூலை 31, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.1–தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் வாழ்க்கை திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.
தனிப்பட்ட சாதனைக்கான ஸ்மார்ட் இலக்குகளை அமைத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். போடி சி.பி.ஏ., கல்லுாரி வணிகவியல்துறைத் தலைவர் பரத்ராஜா பேசுகையில், ‘மாணவர்கள் தங்களுக்கு என ஒரு இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். வாழ்வில் மேம்பட திட்டமிடல், நேர மேலாண்மை, தன்னம்பிக்கை அவசியம்,’ என்றார்.
