/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'நிழல் இல்லாத நாள்' செயல் விளக்க பயிற்சி
/
'நிழல் இல்லாத நாள்' செயல் விளக்க பயிற்சி
ADDED : ஏப் 16, 2024 04:59 AM
போடி : போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் 'நிழல் இல்லாத நாள் ' பற்றி மாணவர்களுக்கான செயல் விளக்க பயிற்சி நடந்தது.
சூரியன் ஒரு ஆண்டில் குறிப்பிட்ட சில நாட்கள் மடடும் செங்குத்தாக அமையும். இந்த நாட்களில் நண்பகல் நம் நிழல் நீளாமல் காலடியின் கீழே அமையும். இந்த நாள் 'நிழல் இல்லா நாள் ' அல்லது 'பூஜ்ஜிய நிழல் நாள் ' என அழைக்கப்படுகிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை நிகழ்வு நடைபெறும். பெரும்பாலும் செங்குத்தான பொருட்களை வைத்து பார்த்தால் நமக்கு நன்கு புலப்படும்.
குறிப்பாக பாட்டில், கம்பி, குழாய்களை வைத்து பார்த்தால் நேரம் செல்ல செல்ல நிழல் நீளம் மாறுபடுவதை எளிதாக காணலாம். இந்நிகழ்வு பூமியின் சாய்வு மற்றும் சூரியனை சுற்றி உள்ள அதன் சுற்றுப் பாதையின் காரணமாக நிகழ்கிறது. நேற்று போடியில் மதியம் 12.17 மணி முதல் 12.24 மணி வரை நிழல் இல்லாத நாளாக அமைந்ததை பள்ளி ஆசிரியர் சந்திரகலா மாணவர்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் அளித்தார். ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நேரம் மாறுபடுவதையும் எடுத்து கூறினார்.

