/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
யானைகள் இறப்பை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள்: வனத்துறை தகவல் கேரளாவில் 8 ஆண்டுகளில் 845 யானைகள் இறப்பு

ADDED : ஜூலை 29, 2024 12:20 AM

கம்பம்: யானைகள் இறப்பை குறைக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க மத்திய வனம் மற்றும் சுற்றுப் புறச் சூழல் அமைச்சகம் உத்தரவிட்டிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
யானைகள் கணக்கெடுப்பு சமீபத்தில் நடந்தது. ஒரே சமயத்தில் தென் மாநிலங்களில் நடந்தது. தற்போது யானைகள் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2023ல் நடந்த கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 2,961 யானைகள் இருந்துள்ளன. இதற்கிடையே யானைகள் இறப்பு தென் மாநிலங்களில் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கடந்த 2015 முதல் 2023 வரை 8 ஆண்டுகளில் கேரளாவில் மட்டும் 845 யானைகள் இறந்துள்ளன. குறிப்பாக 10 வயதிற்கு உட்பட்ட யானைகள் அதிகம் பலியாகி உள்ளன.
முக்கிய காரணமாக குறிப்பிட்ட ஒரு வைரஸ் (EEHV - HD) யானைகளை தாக்குவதால், உடன் இருக்கும் குட்டிகளை பாதிப்பதாக கூறப்படுகிறது. குட்டிகள் பெரிய யானை கூட்டங்களுடன் இருந்தால், வைரஸ் பாதிப்பு தாக்காது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர வனப்பகுதிக்குள் யானைகள் வாழ்விடங்கள் சுருங்குவது, சீதோஷ்ண நிலை மாற்றம் குறிப்பாக அதிக வெப்பம், ஒரு சில தாவரங்ளால் யானைகளில் தீவனம் குறைவது, மனிதர்களின் நடவடிக்கை என பல காரணங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
வன உயிரின - மனித மோதல், ரயில்வே கிராசிங், மின் வேலி போன்ற பல்வேறு காரணங்களால் யானைகள் அதிக எண்ணிக்கையில் பலியாகின்றன. இவற்றை தவிர்த்து யானைகள் இறப்பை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க மாநில வனத்துறை தலைவர்களை, மத்திய வனம் மற்றும் சுற்றுப் புறச் சூழல் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் யானைகள் இறப்பு தணிக்கை அமைப்பு (Tamil Nadu Elephant death Audit Frame work) ஒன்றை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.