சேவை மனப்பான்மை உருவாக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
சேவை மனப்பான்மை உருவாக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
ADDED : மே 27, 2024 06:05 AM
அ நிறம் | அளவு
தேனி : தேனி வேதபுரீ சித்பவானந்தர் ஆசிரமத்தில் தேசிய ஆசிரியர் சங்க தமிழக அளவிலான பயிற்சி முகாம் நடந்தது. ஆசிரம தலைமை சுவாமிஜி ஸமானந்தர்ஜி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மாநிலத் தலைவர் திரிலோகச்சந்திரன் தலைமை வகித்தார். சங்க மாவட்ட நிர்வாகிகள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.
மாணவர்கள் மத்தியில் தேசிய சிந்தனையை உருவாக்குதல், ஆசிரியர்கள மத்தியில் சேவை மனப்பான்மையை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது.
மாநிலப் பொறுப்பாளர்கள் சரவணக்கிருஷ்ணன், சிவக்குமார், நக்கீரன், நல்லசிவன் உள்ளிட்ட குழுவினர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
