தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆடிப்பட்ட விதைப்புக்கு மானியத்தில் விதைகள்

ஆடிப்பட்ட விதைப்புக்கு மானியத்தில் விதைகள்

ஆடிப்பட்ட விதைப்புக்கு மானியத்தில் விதைகள்


ADDED : ஜூலை 31, 2024 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2024 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி, : ஆடிப்பட்ட விதைப்பு தேவையான விதைகளை மானிய விலையில் வாங்கி பயன்படுத்துமாறு ஆண்டிபட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்து இருப்பதாவது: ஆண்டிபட்டி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சின்ன துவரை, நிலக்கடலை, பாசிப்பயறு, குதிரைவாலி விதைகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளன. தற்போது ஆண்டிபட்டி பகுதியில் துவரை விதைப்புக்கான சூழல் நிலவுகிறது. மழையை பயன்படுத்தி மானாவாரி, இறவை பாசன நிலங்களில் நிலக்கடலை, பாசிப்பயறு, குதிரைவாலி ஆகியவற்றை பயிரிடலாம். கடந்த ஆண்டு ஆண்டிபட்டி பகுதியில் 700 ஏக்கர் துவரை சாகுபடி செய்யப்பட்டது.

நடப்பாண்டில் 100 ஏக்கர் அளவு கூட இன்னும் விதைப்பு துவங்கவில்லை. நிலக்கடலை கடந்த ஆண்டு 1250 ஏக்கர் விதைப்பு செய்யப்பட்டது.

மானிய விலையில் வழங்கப்படும் விதைகளை விதைப்புக்கு வாங்கி விவசாயிகள் அதிக பலன் பெறலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us