ADDED : ஏப் 15, 2024 01:07 AM
அ நிறம் | அளவு
போடி,- போடி வலசத்துறை ரோட்டில் வசிப்பவர் ரவிசங்கர் 37. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வருவது வழக்கம்.
மனைவி முத்துமாரி 32, பலமுறை கண்டித்தும் கணவர் கேட்கவில்லை. நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி முத்துமாரியின் தாயாரிடம் ரூ.1000 வாங்கி சென்றவர் வேலைக்கு செல்லவில்லை.
இதனை மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிசங்கர் விஷம் குடித்துள்ளார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
