ADDED : மார் 11, 2025 05:44 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் டி.பெருமாள்பட்டி வெற்றி பிள்ளையார், சீலைக்காரி அம்மன், பட்டத்தரசி அம்மன் கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.
இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் கணபதி ஹோமம், மகா சங்கல்பம், வேதபாராயணம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து யாக பூஜைகள், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தது. 2ம் நாளில் கணபதி ஹோமம், பால்குடம், மங்கள இசை, வேத பாராயணம், நாடி சந்தானம், மூலிகையினால் யாகம், நவக்கிரக ஹோமம், பூர்ணா ஹூதி தீபாராதனை நிகழ்ச்சிகளுக்கு பின் கடம் புறப்பாடும் அதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும், விக்கிரகங்களுக்கு மகா அபிஷேகமும் நடந்தது.
பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.