ADDED : மே 29, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
கூடலுார், மே 30-
கூடலுார் கன்னிகாளிபுரத்தில் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
முன்னதாக மங்களஇசை, மகா கணபதி பூஜை, கோ பூஜை, வாஸ்து பூஜை நடந்தது. வேதபாராயணம், சக்தி விநாயகர் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புனித நீர் தெளிக்கப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஸ்தலத்தார் சங்கரநாராயண சர்மா, சீனிவாச சர்மா, சுந்தர் சர்மா ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
