sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தேனி/ விதையில்லா திராட்சை பரப்பளவு குறைவு மீண்டும் பன்னீர் திராட்சை ஆதிக்கம் நவீன தொழில் நுட்ப ஆலோசனை வழங்க வலியுறுத்தல்

விதையில்லா திராட்சை பரப்பளவு குறைவு மீண்டும் பன்னீர் திராட்சை ஆதிக்கம் நவீன தொழில் நுட்ப ஆலோசனை வழங்க வலியுறுத்தல்

விதையில்லா திராட்சை பரப்பளவு குறைவு மீண்டும் பன்னீர் திராட்சை ஆதிக்கம் நவீன தொழில் நுட்ப ஆலோசனை வழங்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 07, 2024 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2024 06:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கம்பம்: மாவட்டத்தில் விதையில்லா திராட்சை சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. மாறாக பன்னீர் திராட்சையின் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

கம்பம் மற்றும் ஒடைப்பட்டி பகுதிகளில் திராட்சை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது.

கம்பம் பகுதியில் விதையுள்ள பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சை மற்றும் பன்னீர் திராட்சையும் சாகுபடி செய்யப்படுகிறது. விதையில்லா திராட்சைக்கு நல்ல விலை கிடைக்கும்.

நவ.,முதல் ஏப்., வரை மஹாராஷ்டிராவில் இருந்து வரும் விதையில்லா திராட்சை கிலோ ரூ.200 வரை கிடைக்கும். ஆனால் பன்னீர் திராட்சை சராசரியாக ரூ.50 வரை மட்டுமே கிடைக்கும். பன்னீர் திராட்சை ஆண்டு முழுவதும் கிடைக்கும். விதையில்லா திராட்சை ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்கின்றனர்.

விதையில்லா திராட்சை ஒடைப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த விவசாயிகளும், தற்போது அதை கைவிட்டு பன்னீர் திராட்சை பக்கம் திரும்ப துவங்கி உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மஹாராஷ்டிராவில் சாகுபடி செய்யப்படும் விதையில்லா திராட்சை ரகம் கம்பம் பகுதியில் சாகுபடியில் நன்றாக வருகிறது. ஆனால் அறுவடை நேரத்தில் மழை பெய்தால் பழம் உடைந்து வீணாகிறது. எனவே விதையில்லா திராட்சை சாகுபடி செய்ய விரும்பவில்லை என்றார்.

ஓடைப்பட்டி விவசாயிகள் கூறுகையில், விதையில்லா திராட்சைக்கு நவீன தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் விலை கிடைக்கவில்லை.

மழை பெய்தால் பழம் உடைந்து விடும். சரத், தாம்சன், சோனா உள்ளிட்ட பல ரகங்கள் உள்ளன . தற்போது பச்சை விதையில்லா திராட்சை முழுவதும் கிடையாது. கறுப்பு மட்டும் உள்ளது. 1500 ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது 300 ஏக்கராக குறைந்து விட்டது என்றார்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண தோட்டக்கலைத்துறையும், திராட்சை ஆராய்ச்சி நிலையமும முன்வர வேண்டும்.

விதையில்லா திராட்சை சாகுபடி செய்ய ஊக்குவிக்கவும், குறிப்பாக மழையால் சேதமடையாத விதையில்லா திராட்சை ரகங்களை சாகுபடி செய்ய வேர் குச்சிகள் வழங்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை விளக்கி கூற வேண்டும். அப்போது தான் விதையில்லா திராட்சை சாகுபடி பரப்பு குறையாமல் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us