ADDED : ஜூலை 08, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
போடி ஜூலை 9 -
போடி தேவர்காலனி சேர்ந்தவர் பரமன் 59.
சொந்தமான இடத்தில் தகர கொட்டகை அமைத்து ஆடு, கோழி களை வளர்த்தார். மூன்று நாட்களுக்கு முன்பு இரவு ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் கொட்டகை பூட்டு உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகள், ஐந்து கோழிகளை திருடுபோயிருந்தது. இரண்டு நாட்களுக்கு பின் உறவினர் சூர்யாவிற்கு வடுகபட்டியை சேர்ந்த சதீஷ் அலைபேசியில் பரமனின் ஆடுகள் வடுகபட்டியில் இருப்பதாக கூறி உள்ளார். ஆடுகளை திருடியது யார் என விசாரித்த போது போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த மகேஸ் 25. அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், வைகை அணையைச் சேர்ந்த பிச்சைமணி 28. என தெரிந்தது. பரமன் புகாரில் போடி டவுன் போலீசார் மகேஸ், பிச்சைமணி உட்பட மூவரையும் கைது செய்தனர்,
