ADDED : மே 22, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
கம்பம், மே 23
கம்பம் வட்டார தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கலை மாலை என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுத்தாளர் முத்துக் கண்ணன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் கவுதம் வரவேற்றார். எழுத்தாளர் சீருடையான் துவங்கி வைத்தார். பத்தாம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். நானும் என் வாசிப்பும் என்ற நேர்காணல் நடைபெற்றது. மாநில துணை செயலாளர் உமர்பாரூக் பங்கேற்றார். முரளிதரன் குழுவினரின் வாசிப்போர் நட்பு என்ற நாடகம் நடைபெற்றது. எழுத்தாளர்கள் பாரதன், சுந்தர், பூமணம் ராஜா ஆகியோர் வாழ்த்தினர்.
வாசிப்பும் என் பேச்சும் என்ற தலைப்பில் பேராசிரியர் பெரிய முருகன் பேசினார். கிளை செயலாளர் லட்சுமணக்குமார் நன்றி கூறினார். ஆசிரியர் சிவாஜி ஒருங்கிணைத்தார்.
