தேனி: தேனி மாவட்டத்தில் அதிக அளவில் காய்கறிகள் உற்பத்தி செய்யும் மாவட்டமாகும். மே, ஜூன் மாத துவக்கத்தில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்தது.
ஜூன் 2,3வது வாரத்தில் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ. 80 வரை விற்பனையானது. இதனால் இல்லதரசிகள், ஓட்டல்களில் தக்காளி பயன்பாடு குறைக்கப்பட்டது. தற்போது மழை குறைந்து வெயில் தாக்கம் அதிகரித்தது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் ஜூன் 24ல் ரூ.60க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ. 25 முதல் 30 விலையில் விற்பனையாகிறது. வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் கூறுகையில், மழை பெய்ததால் உள்ளூர் தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது. தற்போது வருஷநாடு, கூடலுார், கடமலைக்குண்டு, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகின்றன. இதனால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. என்றனர்.