ADDED : ஜூன் 26, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூன் 27-நகர்பகுதிகளை பசுமையாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்பட்டி தேனி நகராட்சி பகுதிகளில் 94ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பார்க்கவி முன்னிலை வகித்தார். நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர்கள் ஜெயசந்திரன், சரவணன், நகரமைப்பு ஆய்வாளர் சலீம், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
