ADDED : ஆக 04, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.5–தேனி பங்களா மேட்டில் தி.மு.க.,வைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தஞ்சையில் நடந்த போராட்டத்தில் முதல்வர் விஜயைஆபாசமாக பேசியதை கண்டித்து த.வெக., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சபரி ஐங்கரன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி, முன்னாள் எம்.பி., பார்த்திபன், நிர்வாகி அன்னப்பிரகாஷ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து எஸ்.பி., அலுவலகத்தில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா உடனிருந்தார்.
