தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கோழிகள் திருடிய இருவர் கைது

கோழிகள் திருடிய இருவர் கைது

கோழிகள் திருடிய இருவர் கைது


ADDED : ஜூன் 15, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம், ஜூன் 16

கம்பம் உலகத் தேவர் தெரு முருகன் மகன் சதீஸ்குமார் 29.

தனது காலி இடத்தில் கோழிகள் வளர்க்கிறார். நேற்று முன்தினம் கோழிகள் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து ரூ.4500 மதிப்புள்ள 3 சேவல்கள், ரூ, 1800 மதிப்புள்ள 3 கோழிகள் திருடு போனது. சதீஸ்குமார் திருடனை பிடிக்க காத்திருந்தார். இந்நிலையில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் ஏறி கோழிகள் அடைத்து வைத்திருக்கும் இடத்தில் குதித்த 3 பேர் சேவல் மற்றும் கோழிகளை திருடிய போது, சதீஸ்குமார் அவரது நண்பர்கள் திருடர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பி ஓடினார். திருடிய கோழிகளுடன் சிக்கிய இருவரை கம்பம் வடக்கு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் கம்பம் குரங்கு மாயன் தெரு பழனிச்சாமி 56, மற்றொருவர் 17 வயது சிறுவன் என தெரிந்தது. போலீசார் பழனிச்சாமியை கைது செய்தனர். சிறுவனை மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us