ADDED : ஏப் 08, 2024 04:58 AM
கம்பம் : மாவட்டத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனைகளில் இதுவரை பறிமுதல் ஏதும் செய்யாததால் பயன் இல்லாதரெய்டாக உள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறையினர் ஆங்காங்கே கட்சி பிரமுகர்களின் வீடுகளில் திடீர் திடீரென சோதனைகள் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் காமயகவுண்டன்பட்டி, கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட பல ஊர்களில் வருமான வரித்துறையின் சிறப்பு குழு திடீர் சோதனைகள் நடத்தியது.
நேற்று காலை சின்னமனுார் அருகே உள்ள வேப்பம்பட்டியில் அரசியல் பிரமுகர் இருவர் வீடுகள் மற்றும் தோட்டங்களில் சோதனை நடைபெற்றது. இதுவரை நடத்திய சோதனைகளில் வருமான வரித் துறையினரால் குறைந்த அளவு பணம் கூட பறிமுதல் செய்யவில்லை.
ஐ.டி. ரெய்டு நடைபெறும் எனத் தெரிந்தே பணத்தை வேறு இடங்களுக்கு மாற்றி விடுகின்றனர். இந்த ரெய்டால் அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு பய உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் பட்டுவாடா நடப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

