/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் நிறுத்தம்
/
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் நிறுத்தம்
ADDED : மார் 28, 2024 01:32 AM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப்பாசன அடிப்படையில் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பரில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் ஜன.,6ல் முழு அளவான 71 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டு ஜன.23ல் நீர் நிறுத்தப்பட்டது. முறைப்பாசன அடிப்படையில் சில மாதங்களாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக சில நாட்கள் நீர் திறந்து விடப்பட்டும், சில நாட்கள் நிறுத்தியும் வைக்கப்படுகிறது.
மார்ச் 22 ல் அணையிலிருந்து வினாடிக்கு 1130 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 62.40 அடியாக இருந்தது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 287 கன அடி.