/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் வயலுக்குள் புகுந்த காட்டு யானைகள்
/
நெல் வயலுக்குள் புகுந்த காட்டு யானைகள்
ADDED : பிப் 09, 2025 05:42 AM

கூடலுார்: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் வயல்கள் உள்ளன. சமீபத்தில் அடிவாரத்தை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை, வாழை, மா உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. இரு தினங்களுக்கு முன் தோட்ட வேலைக்கு சென்று திரும்பிய சரஸ்வதி என்ற பெண்ணை யானை தாக்கியதில் பலியானார்.
இந்நிலையில் நேற்று மதியம் கூடலுார் அருகே வெட்டுக்காட்டில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில் காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்தியது. பகலில் நெல் வயலுக்குள் புகுந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான நெல் வயலில் ஏராளமான நெற்பயிர்களை சேதப்படுத்தியது. வனத்துறையினர் விளை நிலங்களை ஒட்டி அகழி அமைத்தும், சோலார் மின்வேலி அமைத்தும் வனவிலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

