ADDED : ஜூலை 03, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, ஜூலை 4-
பெரியகுளம் ஒன்றியம், ஜி கல்லுப்பட்டி புனித சூசையப்பர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் 74. தேங்காய் உரிக்கும் தொழிலாளி. வீட்டுக்கு முன்பு குத்தூசியால் தேங்காய் உரிக்கும் போது, கை நழுவி குத்தூசியில் விழுந்தார். வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஜேசுராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
--
