ADDED : ஜூலை 03, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
கம்பம், ஜூலை 4
மதுரை தல்லாகுளம் ஏஞ்சல் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் 41, இவர் திருமணமாகாதவர், ஊர் ஊராக சென்று ஒட்டல்களில் வேலை செய்வது வழக்கம்.
சில மாதங்களாக கம்பத்தில் உள்ள ஒட்டலில் வேலை செய்தார். கம்பம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள விடுதியில் தங்கினார். நேற்று முன்தினம் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
