ADDED : ஜூலை 12, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 13–
தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் டூவீலர் பழுது நீக்குதல் பயிற்சி ஜூலை 15ல் துவங்கி 30 நாள்கள் நடக்கிறது.
18 வயது நிரம்பிய ஊரக பகுதியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி,தங்குமிடம்,உணவு இலவசம். தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி வழங்கப்படும்.பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ், வங்கிகடன் ஆலோனை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆதார் நகல், புகைப்படத்துடன் ஜூலை 15 க்குள் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி பயிற்சி மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ஆனந்தபாலாஜி தெரிவித்துள்ளார்.
