நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி 28.
இவரது மனைவி ஜோதிகா 21. ஒன்றரை வயதில் மகன் உள்ளார். பெயின்ட் அடிக்கும் பணி செய்து வரும் ராஜபாண்டி சொந்தமாக பெயின்ட் கடை வைக்க நினைத்தார். இதற்காக பணம் ஏற்பாடு செய்து வந்தார். நண்பரின் விசேஷத்திற்கு சென்று விட்டு மது போதையில் வந்தவர் வீட்டிற்குள் உள்தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

