
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது.
அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜையை தொடர்ந்து சகஸ்ர தீப வழிபாட்டில் 1008 விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பஜனை பாடல்கள் பாடினர்.
பிரசாதம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆர்ய வைசிய மகாசபை மற்றும் மகிளா சபையினர் செய்திருந்தனர்.