தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ 10,547 வாக்காளர்கள் ஆவணங்கள் சமர்ப்பிப்பு

 10,547 வாக்காளர்கள் ஆவணங்கள் சமர்ப்பிப்பு

 10,547 வாக்காளர்கள் ஆவணங்கள் சமர்ப்பிப்பு


ADDED : ஜன 15, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது படிவங்களை சரிவர பூர்த்தி செய்யாத 10, 547 வாக்காளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நவ.,4 முதல் டிச., 14 வரை வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தம் நடந்தது. டிச., 19ல் வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டது. சிறப்பு திருத்த பணியின் போது வழங்கப்பட்ட படிவங்களில் வாக்காளர் 2002 பட்டியலில் இடம் பெற்ற விவரங்கள் அல்லது அவரது உறவினர் இடம் பெற்றிருந்தால் அந்த விவரங்கள் கேட்கப்பட்டிருந்தது.

இந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்யாத மாவட்டத்தை சேர்ந்த 12,572 பேருக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. அவர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை உதவி வாக்குப்பதிவு அலுவலர்களிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் நேற்று வரை நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களில் 10,547 பேர் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us