ADDED : ஜூன் 24, 2026 01:37 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பெரியகுளம் ரோட்டில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சிணமூர்த்தி, எஸ்.எஸ்.ஐ., உதயசூரியன், ஏட்டுகள் சிவசந்திரன், விக்னேஷ், அறிவழகன் ஆகியோர் ஆட்டோக்களை சோதனை செய்தனர்.
இதில் உரிய பெர்மிட், எப்.சி., சான்றிதழ் இன்றி ஓட்டப்பட்ட 14 ஆட்டோக்கள், டிரைவர் மதுபோதையில் ஓட்டியதாக 3 ஆட்டோக்கள் என மொத்தம் 17 ஆட்டோக்கள் பறிமுதல் செய்தனர்.
அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய கோரி ஆர்.டி.ஓ.,விற்கு பரிந்துரைக்கப்பட்டது. வாகன தணிக்கையில் 2 நாட்களில் ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேனியில் ரேசில் ஈடுபடும் ஆட்டோக்கள், சிறுவர்கள் ஓட்டும் டூவீலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
