/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடரும் கனமழையால் 17 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் சேதம்! உள்ளாட்சிகள் மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம்
/
தொடரும் கனமழையால் 17 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் சேதம்! உள்ளாட்சிகள் மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம்
தொடரும் கனமழையால் 17 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் சேதம்! உள்ளாட்சிகள் மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம்
தொடரும் கனமழையால் 17 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் சேதம்! உள்ளாட்சிகள் மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம்
ADDED : அக் 22, 2025 01:11 AM

தேனி:
மாவட்டத்தில் தொடரும் கனமழையால் ஆறுகளில் உள்ள 17 கூட்டுக்குடிநீர் திட்டங்களில் உள்ள மின்மோட்டார்கள், போர்வெல்கள், பகிர்மான குழாய்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் முடங்கியது. தேவையை பூர்த்த செய்ய லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணியினை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.
தேனி மாவட்டத்தின் 130 ஊராட்சிகளில் உள்ள 609 உட்கடை கிராமங்களின் குடிநீர் தேவையை குடிநீர் வடிகால் வாரிய 3 சப்டிவிஷன்கள் மூலம் பொது மக்களின் தினசரி குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. மாவட்டத்தில் நகர் பகுதியில் 6 லட்சத்து 70 ஆயிரத்து 481 பேர், ஊரக பகுதியில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 418 பேர் என மொத்தம் 12.45 லட்சம் மக்களுக்கு தேனி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தேனி, போடி, வைகை அணை சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் வைகை அணை சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 250 கிராமங்களுக்கு 7.5 மில்லியன் லட்சம் லிட்டரும், போடி உபகோட்டத்தில் 24.03 மில்லியன் லட்சம் லிட்டரும், தேனி உபகோட்டத்திற்கு 18.38 மில்லியன் லட்சம் லிட்டர் என நாள் ஒன்றுக்கு 709 உட்கடை கிராமங்கள், மற்றும் தொகுப்பு வீடுகளுக்கு 50.31 மி்ல்லியன் லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கனமழை
கடந்த அக்.17 இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் தேனி உப கோட்டத்தில் உள்ள 13 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் சின்னச்சுருளி, மயிலாடும்பாறை, கோயில்பாறை, ஆத்தங்கரைப்பட்டி, ஜங்கால்பட்டி, பாலக்கோம்பை, வள்ளல்நதி, அரப்படித்தேவன்பட்டி என 8 கூட்டுக்குடிநீர் திட்டங்களும், போடி உபகோட்டத்தில் உள்ள 14 திட்டங்களில் காமாட்சிபுரம், கோவிந்தநகரம். சங்கராபுரம், வேப்பம்பட்டி, கோம்பை, பண்ணைபுரம், தேவாரம், தாடிச்சேரி, ஓடைப்பட்டி என 9 கூட்டுக்குடிநீர் திட்டங்கள், பகிர்மான குழாய் வெள்ளத்தில் முழ்கி தேசமடைந்தது. இதனால் குடிநீர் வழங்கும் பணி முடங்கியுள்ளது. இதனை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை துவங்கி உள்ளன.
தலைமை பொறியாளர் ஆய்வு
தென்மண்டல குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் கணேஷ், மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமரன், தேனி நிர்வாகப் பொறியாளர் பார்த்திபன் ஆகியோர் குழாய்கள் சேதமடைந்த சின்னச்சுருளி, சங்கராபுரம், போடி, லோயர்கேம்ப் வரை ஆய்வு செய்தனர். பின் ‛பருவமழை குறைந்து, நீர் வடிந்தால்தான் சீரமைப்புப் பணி மேற்கொள்ள முடியும்,' என்றனர்.