ADDED : ஜன 03, 2026 07:32 AM

சின்னமனூர்: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை சென்ற குழுவினர் மீது சபரிமலைக்கு சென்ற வேன் மோதியதில் ஐயப்ப பக்தர்கள் மாரிச்சாமி 55, ராம்கி 36, ஆகியோர் பலியாயினர்.
ஆண்டிபட்டியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் சபரிமலைக்கு பாதயாத்திரை சென்றனர். நேற்று முன்தினம் இரவு வீரபாண்டியில் தங்கி நேற்று அதிகாலை மீண்டும் பாதயாத்திரையை துவக்கினர். சீலையம்பட்டியைச் கடந்து பைபாஸ் ரோட்டில் நடந்து சென்ற போது வேடசந்தூரில் இருந்து பக்தர்களை ஏற்றிச் கொண்டு சபரிமலைக்கு சென்ற வேன் பக்தர்கள் மீது மோதியது.
இதில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த மாரிச்சாமி, ராம்கி ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியாயினர். போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வேன் டிரைவர் வேடசந்தூர் அருகே மேலப்பாடியூரை சேர்த்த தினேஷ்குமாரை 34, சின்னமனுார் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

