தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சாய் விளையாட்டு விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை

 சாய் விளையாட்டு விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை

 சாய் விளையாட்டு விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை


ADDED : ஜன 17, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் சாய் விளையாட்டு விடுதியில் இரண்டு வீராங்கனைகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கேரள மாநிலம் கொல்லத்தில் இந்திய விளையாட்டு ஆணை யத்தின் (சாய்) மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனை களான பள்ளி மாணவிகள் தங்கி உள்ளனர்.

கோழிக்கோடு அருகே கடலொண்டி பகுதியைச் சேர்ந்த ரவி மகள் சாந்தரா 18, திருவனந்த புரம் முதாக்கல் பகுதியை சேர்ந்த வேணு மகள் வைஷ்ணவி 15, தங்கி இருந்தனர்.

கபடி வீராங்கனை யான வைஷ்ணவி கொல்லத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பும், தடகள வீராங்கனையான சாந்தரா பிளஸ் 1ம் படித்து வந்தனர். நேற்று முன் தினம் பயிற்சி முடித்து இரவில் தங்கள் அறைக்கு சென்றனர். காலையில் இருவரும் பயிற்சிக்கு செல்லாததால் சக மாணவிகள் சென்று அறை கதவை தட்டியபோது திறக்கவில்லை.

அதை தொடர்ந்து காவலாளிகள் அறை கதவை உடைத்து பார்த்த போது இருவரும் மின்விசிறியில் துாக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர். கொல்லம் கிழக்கு போலீசார் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொல்லம் கலெக்டர் தேவிதாஸ், போலீஸ் கமிஷனர் கிரண் நாராயணன், சாய் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் எழுதி வைத்ததாக ஒரு கடிதம் கிடைத்துள்ளது .அதில் விடுதியில் தாங்கள் மிகவும் கொடுமைகளை அனுபவித்ததாக குறிப்பிடப் பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us