ADDED : மார் 20, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
தேனி: பெரியகுளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தேர்தல் விதிகளை மீறி திமுக நிர்வாகி மனோவா என்பவர் காரில் கொண்டு சென்ற 200 பனியன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவற்றை பெரியகுளம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் ஆண்டிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் மதுரை பெத்தானியபுரத்தை சேர்ந்த மணிகண்டனிடம் அரசியல் தலைவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய 6 பரிசுப்பொருட்கள் (பாத்திரங்கள்) பறிமுதல் செய்யப்பட்டன.
