/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 299 பேர் கைது
/
மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 299 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 299 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 299 பேர் கைது
ADDED : ஜன 07, 2026 06:06 AM

தேனி: தேனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 299 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி கலெக்டர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு., அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பி.எல்.ஓ., பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் நாகலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் வளர்மதி, நாகலட்சுமி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயபாண்டி உள்ளிட்டோர் மறியலில் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட பணியாளர்கள், சி.ஐ.டி.யு., சங்கத்தினர் 299 பேரை கைது செய்து, மண்டபத்தில் அடைத்தனர். கைது செய்த போது அரசு பஸ்கள், போலீஸ் வாகனத்தை பயன்படுத்தினர். ஒரு போலீஸ் வாகனம் பழுதானதால் ஆட்டோவில் சிலரை அழைத்து சென்றனர்.
செயல்படாத மையங்கள் ஊழியர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால் மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள் செயல்பட வில்லை.

