ADDED : செப் 19, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
கம்பம், செப்.
20
மத்திய அரசின் விபி ஜி ராம் ஜி எனும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கிராமபுறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள்வேலை என்பதை 125 நாட்கள் என உயர்த்தியும். சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.218 என்பதை ரூ.336 என உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்தில் கடந்த ஜுன் மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து இன்று வரை அதாவது 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு முறை சம்பளம் வழங்குவது வழக்கமாகும். ஆனால் கடந்த 13 வாரங்களாக தொடர்ந்து சம்பளம் வழங்கப்படாததால், தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.
