/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
30 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்
/
30 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்
ADDED : பிப் 22, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : கம்பம் நகராட்சியில் லாரி புக்கிங் ஆபீசில் 30 ஆயிரம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நகராட்சியில் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் புழக்கம் அதிகளவில் உள்ளது. மெயின் ரோட்டில் சி.எஸ்.ஐ., பள்ளிக்கு அருகில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் நகராட்சி அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். கூடலூரில் உள்ள கடை ஒன்றுக்கு வந்திருந்த 30 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளர்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. லாரி புக்கிங் அலுவலகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.