தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மதுபாரில் தகராறு; 4 பேர் கைது

 மதுபாரில் தகராறு; 4 பேர் கைது

 மதுபாரில் தகராறு; 4 பேர் கைது


ADDED : மார் 28, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றியம், ஜி.கல்லுப்பட்டி பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மணிவேல் 39. கெங்குவார்பட்டியில் தனியார் பாரில் மது அருந்திக்கொண்டிருந்தார். எதிரே மதுரை பேரையூர் தாலுகா, தாடையம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மது அருந்தும் போது, மணிவேலை முறைத்து பார்த்து அவரது டேபிளை தட்டியுள்ளார். இது குறித்து மணிவேல் கேட்டதற்கு நாகராஜ் கல்லால் மணிவேலை தாக்கி காயப்படுத்தினார். நாகராஜ் நண்பர்களான

கெங்குவார்பட்டியைச் சேர்ந்த சிவசாரதி 37. சிவா 20, பார்த்திபன் 37, ஆகியோர் மணிவேலை அடித்து கொலைமிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மணிவேல், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது புகாரில் தேவதானப்பட்டி போலீசார் நாகராஜ் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us