/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
/
புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
ADDED : ஆக 06, 2025 08:34 AM
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே சிறப்பாறையில் புள்ளிமான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
கடமலைக்குண்டு அருகே சிறப்பாறையை ஒட்டி உள்ள மலைப்பகுதியில் புள்ளிமான் வேட்டையாடப்படுவதாக கண்டமனூர் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கிராமத்தை ஒட்டி உள்ள தனியார் தோட்டத்தில் சிலர் சந்தேகப்படும்படி நடமாடினர். அங்கு சென்ற வனத்துறையினர் தோட்ட பகுதியில் மானின் குடல் மற்றும் இறைச்சி கிடப்பதை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்களை பிடித்த வனத்துறையினர் கண்டமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
உதவி வனப் பாதுகாவலர் அரவிந்த், கண்டமனூர் ரேஞ்சர் சிவாஜி, வனக்காப்பாளர் தினேஷ்குமார், வனவர் விஜயகுமார்ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நாய்களை வைத்து புள்ளிமானை வேட்டையாடப்பட்டதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து இதில் தொடர்புடைய சிறப்பறையைச் சேர்ந்த தெய்வம் 61, மொக்கபாண்டி 42, அஜித் 27, ராம்குமார் 40 ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ. 2லட்சம் அபராதம் விதித்தனர்.