ADDED : ஏப் 14, 2026 09:56 PM
அ நிறம் | அளவு
தேனி:சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் தபால் ஓட்டுப்பதிவு இன்று துவங்க உள்ள நிலையில் 41 குழுக்களை நியமித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தார்.
ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 தொகுதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று ஓட்டளிக்க முடியாத 85 வயது நிரம்பியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக தபால் ஓட்டு பெறப்படுகிறது. இன்று (ஏப்.15) முதல் தேனி மாவட்டத்தில் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் ஓட்டு சேகரிக்க உள்ளனர். இதற்காக 41 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள், ஓட்டுப்பதிவினை வீடியோ பதிவு செய்யும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தார்.
