/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்னெச்சரிக்கையாக 492 மின் கம்பங்கள் மாற்றம்
/
முன்னெச்சரிக்கையாக 492 மின் கம்பங்கள் மாற்றம்
ADDED : நவ 23, 2025 03:53 AM
தேனி: தேனி மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளதாவது: கடந்த மூன்று மாதங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பங்கள் 234, சாய்ந்த மின் கம்பங்கள் 258 என மொத்தம் 492 மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர மின்கம்பிகள் 78.9 கி.மீ., துாரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ் பார்மர்கள் 433 பராமரிக்கப்பட்டுள்ளன. மழைகாலத்தில் மின்வாரியம் தொடர்பான பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்க தலா 30 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சிறப்பு அலுவலர் அதிகாரியாக செயற்பொறியாளர் ரமேஷ்குமார் நியமிக்கப்பட்டாளார். இது தவிர கோட்டம் வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின் வாரியம் தொடர்பான புகார்களை 94987 94987 என்ற கட்டணமில்லாத அலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

